தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை சங்கவி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது கணவர் மற்றும் குழந்தை என குடும்பத்துடன் செட்டிலாகி சினிமாவை ஓரம் கட்டி விட்டார். நிலையில் நடிகை சங்கவி குழந்தை பெற்றுக் கொண்ட அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து உள்ளார்.

அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணமான அவர் அடுத்த சில மாதங்களிலேயே கர்ப்பமாகி இருக்கிறார். ஆனால் எட்டாவது மாதத்தில் இதயத்துடிப்பு இல்லாததால் அபார்ஷன் செய்து விட்டார். இரண்டாவது குழந்தையும் அதேபோல எட்டாவது மாதத்தில் அபார்ஷன் ஆகிவிட்டது. அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு சங்கவிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.