விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இலங்கையில் இருந்து வந்த ஜனனி. இவர் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகி தற்போது லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். அதேசமயம் ஜிவி பிரகாஷ் உடன் ஆல்பம் பாடல் ஒன்றிலும் தற்போது இவர் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தற்போது துளியும் முகத்தில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நீங்க அழகா தான் இருக்கீங்க எனக் கூறி புகைப்படத்தை வைரல் ஆகி வருகிறார்கள்.