பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த காலத்தில் உலகத் தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டோக் சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் இம்ரான் கான் பிரதமர் தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  இம்ரான் கான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.