தென்கொரியாவின் ஹால் ஆற்றங்கரையோரம் நடந்த தூங்குபோட்டியில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியானது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூக்கத்தில் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த போட்டியானது நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியின்போது  தூங்கும்பொழுது இடை இடையே காதில் கத்துவது, ரெக்கைகளை வைத்து வருடுவது என்று போட்டியாளர்களுக்கு சில இடையூறுகளும் கொடுக்கப்பட்டது.

இதில் ஏரளமான போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒருசிலர்  வெற்றி பெற்றனர். தூங்குவதற்கு முன்பும் பின்பும் உள்ள இவர்களுடைய இதயத் துடிப்பை கணக்கிட்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.