பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக், 2026 டி20 உலகக்கோப்பையில் தனது வித்தியாசமான பந்துவீச்சு பாணியால் கவனம் ஈர்த்து வருகிறார். கை வளைந்திருப்பது போலவும், பந்தை வீசும் முன் சற்று நின்றும் அவர் பந்துவீசுவது கேமரூன் கிரீன் போன்ற பல ஜாம்பவான்களின் விமர்சனத்துக்கு உள்ளானாலும், அவரது நிஜ வாழ்க்கை கதை பலரையும் நெகிழ வைத்துள்ளது. தொடக்கக் காலத்தில் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்து போன தாரிக், விளையாட்டை விட்டு விலகி துபாயில் ஒரு கொள்முதல் நிறுவனத்தில் (Purchasing company) சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார்.
Pakistan’s Usman Tariq says he gave himself another shot at cricket after being inspired by the train scene from MS Dhoni: The Untold Story. pic.twitter.com/ynyNXcVtIe
— Ragav X (@ragav_x) February 6, 2026
துபாயில் இருந்தபோது, இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறான ‘MS Dhoni: The Untold Story’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். தோனியின் போராட்டங்கள் மற்றும் விடாமுயற்சி தாரிக்கின் மனதை அப்படியே மாற்றியுள்ளது. “அந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான், மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற வெறி எனக்கு வந்தது. உடனே வேலையை விட்டுவிட்டு பாகிஸ்தான் திரும்பி வந்தேன்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தோனி கொடுத்த அந்த ஒரு தூண்டுதல், இன்று அவரை உலகக்கோப்பை மேடையில் நிறுத்தியுள்ளது. கிரிக்கெட்டுக்கு எல்லைகள் இல்லை என்பதற்குத் தாரிக்கின் இந்தக் கதை ஒரு மிகச்சிறந்த உதாரணம்
