கால்பந்து விளையாட்டில் உலகத்தையே மிரட்டும் இத்தாலி அணி, இப்போது கிரிக்கெட் களத்திலும் தனது ஆதிக்கத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. தனது முதல் டி20 உலகக்கோப்பையில் விளையாடி வரும் இத்தாலி, நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி, இத்தாலியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 123 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இத்தாலி அணியில், தொடக்க வீரர்களாகக் களம் கண்ட சகோதரர்கள் ஜஸ்டின் மோஸ்கா (60*) மற்றும் அந்தோனி மோஸ்கா (62*) ஆகிய இருவரும் நேபாள பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

விக்கெட் எதையும் இழக்காமல் இந்தச் சகோதரர்களே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது கிரிக்கெட் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கத்துக்குட்டி அணியாகக் கருதப்பட்ட இத்தாலி, அனுபவம் வாய்ந்த நேபாளத்தை இப்படி ஒரு வழி செய்தது டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.