தமிழக வருவாய் துறையின் வரவு, செலவு மற்றும் நிதிநிலை குறித்த துல்லியமான புள்ளி விவரங்களை உடனே சமர்ப்பிக்க முடியாது என்றும், அதற்குத் தனக்குக் குறைந்தது ஒரு மாத காலமாவது அவகாசம் தேவை என்றும் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன்  ஓப்பனாகக் கூறியுள்ளார்!

தற்போதைய புதிய த.வெ.க அரசு இன்னும் இரண்டு வாரங்களில் தமிழக நிதிநிலை குறித்த மெகா ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடத் தீவிரமாகத் தயாராகி வரும் வேளையில், வருவாய் துறையின் இந்தத் திடீர் ‘டைம் ‘ கோரிக்கை  பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த கால ஆட்சிகளின் நிதி மேலாண்மைத் குளறுபடிகளை அக்குவேறாகப் பிரித்து மேயப் போகும் அந்த ஹை-வோல்டேஜ் வெள்ளை அறிக்கைக்கு முன்னதாக, அனைத்துத் துறைகளின் கணக்குகளும் கேட்கப்பட்டு வரும் நிலையில், “எனக்கு அவகாசம் தர வேண்டும்” என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.