பாத்ரூமில் டூத்பிரஷை வைக்கும் போது, பல்லி நக்கிவிடுமோ என்ற பயமும், தூசி படிந்துவிடுமோ என்ற கவலையும் பலருக்கு இருக்கும். இதைத் தவிர்க்க ஒரு எளிய டிப்ஸ் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. கடைகளில் கிடைக்கும் சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிய சிறிய ஓட்டைகள் போடுங்கள், அது பிரஷ்களைத் தொங்கவிட உதவும்.
அடுத்து, டப்பாவை டபிள் டேப் கொண்டு பாத்ரூம் சுவற்றில் ஒட்டிவிடுங்கள். ஓட்டைகளில் ஒவ்வொரு டூத்பிரஷையும் தலைகீழாகத் தொங்கவிட்டு, டப்பாவை மூடிவிடுங்கள். இப்படி செய்தால் தூசி படியாது, பல்லியின் எச்சிலும் படாது, பிரஷ் எப்போதும் சுத்தமாக இருக்கும். இந்த ஐடியா சமூக வலைதளங்களில் பெரிதாகப் பரவி வருகிறது, நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
