தற்போது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் துணிக்கடையிலிருந்து துணிகளை பில் போடாமல் தூக்கி வந்து, அவசர அவசரமாக கார் கதவை திறக்க முயற்சி செய்கிறார். அந்நேரத்தில் காருக்குள் இருந்த கணவன் கதவை லாக் செய்து விட்டு திறந்துவிடவில்லை. கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக தான் துணி வாங்க சென்றிருக்கின்றனர்.

இதற்கிடையில் துணி வாங்கும்போது துணியை திருடலாம் என திட்டம் போட்டிருக்கிறார்கள். அதன்படி செய்துவிட்டு தப்பித்து வந்து காரில் ஏறும் போது இப்படியொரு பிளானை செய்திருக்கிறார் கணவன். எப்படியும் தப்பித்துவிடலாம் எனும் எண்ணத்தில் ஓடோடி வந்தபோது கடைசி நேரத்தில் கணவன் கார் கதவை திறக்காமல் இருந்தது தான் டிவிஸ்ட். அதன்பின் கடைசியில் கணவன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட, ஓடியாவது தப்பித்துவிடலாம் என அப்பெண் முயற்சி செய்கிறார்.

இருப்பினும் துணிக்கடையிலிருந்த செக்யூரிட்டி வேகமாக ஓடிவந்து அந்தப் பெண்ணை பிடித்து கைது செய்து அழைத்து செல்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கால், வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காக கணவன் ஸ்மார்டாக யோசித்து மனைவியை இப்படி சிக்க வைத்திருக்கிறார் என கேலி செய்துள்ளனர்..

https://twitter.com/ClownWorld_/status/1613126941674213376?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1613126941674213376%7Ctwgr%5Ed00bded1b8580df8c50061b6d710dd68900d3118%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fhusband-tactfully-trapped-his-stealing-wife-to-shop-security-video-viral-428468