உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் தேவையான அமினோ அமிலங்கள், விட்டமின், மினரல்கள் மற்றும் மிகவும் முக்கியமான பி12 புரதம் என ஊட்டச்சத்து மிக்க சிக்கன் சுவையாலும் மக்களை கட்டிப்போட்டு வைக்கும் உணவு என்றே சொல்லலாம். பொதுவாக சிக்கன் சமைக்கும் முன் இறைச்சியை தண்ணீரில் கழுவி விட்டு சமைப்பது வழக்கம். அப்போது செய்யும் சிறிய தவறினால் ஃபுட் பாய்சன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக பிரிட்டன் உணவு தர முகமை எச்சரித்துள்ளது. சிக்கன் கழுவும் போது அந்த தண்ணீர் நம் ஆடைகள் மீது தெறிக்க, அல்ல கைகளில் பட வாய்ப்புள்ளது.

அப்போது அதில் உள்ள கேம்பிளோ ஃபேக்டர் எங்கே அந்த தண்ணீர் படுகின்றதோ அங்கே படிந்து விடும். சிக்கன் சுத்தப்படுத்திய பின் கைகளை சரிவர கிருமி நாசினி போட்டு கழுவாமல் இருந்தாலும் அல்லது அதே ஆடையை அணிந்திருந்தாலோ இந்த பாக்டீரியா உடலுக்குள் ஊடுருவி மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற சாதாரண உடல் உபாதைகளில் தொடங்கி ஐபிஎஸ் எனப்படும் குடல் நோய்க்குறி நரம்பு மண்டலத்தை தாக்கும் ஜிபிஎஸ் போன்ற நோய்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. சிக்கனை எழுபது டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு குறையாமல் சமைப்பது மற்றும் சிக்கன் கழுவும் போது பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிப்பதால் பாக்டீரியா தொற்றை தவிர்க்கலாம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.