குளிர்பானங்கள், டீ, காபி குடிப்பதால் ஆண்களுக்கு வழுக்கை விழும் அபாயம் அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவு பழக்கத்தால் தான் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

அதன்படி ஒவ்வொரு நாளும் ஒரு கிளாஸ் சோடா, குளிர்பானங்கள், பிற இனிப்பு பானங்களை உட்கொள்வது ஆண்களுக்கு வழுக்கை அபாயத்தை 57% அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகளவில் டீ, காபி குடிப்பதாலும் வலுக்கை வரும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த உணவுகளால் தலைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்காது என்றும் அதன் காரணமாக முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு வழுக்கை விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.