சிங்கம் என்றாலே காட்டின் அதிபதி… வேட்டையில் வல்லவன். ஆனால் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், ஒரு சாதாரண நாயிடம் சிங்கம் பின்வாங்கும் காட்சி சமூக வலைதளங்களை கடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

@itssunildutt என்ற X பயனர் பதிவிட்ட இந்த வீடியோவில், ஒரு பெண் சிங்கம் நாயை எதிர்த்து நெருங்கும் காட்சியைக் காணலாம். ஆனால், சிங்கத்தின் அருகே சென்ற நாய் திடீரென அதனை நோக்கி குரைத்து தாக்கும் முயற்சி செய்கிறது. இந்த ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்காமல், பெண் சிங்கம் பயந்தபடியே பின்வாங்குகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வைகள், பதில்கள், மெம்ஸ்கள் என வைரலாக பரவி வருகிறது.

சாதாரணமாக ஒரு சிங்கத்தின் முன் சற்று கூட நெருங்க முடியாது. ஆனால் இந்த நாய், தன்னம்பிக்கையுடன் சிங்கத்தை எதிர்கொள்கிறதையே பார்த்து சமூக வலைதள பயனர்கள் “நாயின் தைரியத்தை பாருங்க!”, “காட்டின் ராணியை அடக்கிட்டானே!” எனப் பாராட்டுகிறார்கள்.

“>

“முதல்ல நாயே பாஸ்” என்று சிலர் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ சரியான இடத்திலும், நேரத்திலும் பதிவு செய்யப்பட்ட ஒரு அபூர்வமான சம்பவமாக கணிக்கப்படுகிறது. காட்டின் விலங்குகள் நடத்திய இந்தச் சண்டையில், சாதாரணமாக கருதப்படும் நாயே வீரனாக மாறி சிங்கத்தை ஓட்டியது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.