பீகார் மாநிலம் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட விசித்திரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ரயிலின் பொதுப் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணி ஒருவர் தரையிலேயே படுத்து உறங்க முடிவு செய்தார்.
<a href=”http://
View this post on Instagram
“>
ஆனால், அவர் வெறும் தரையில் படுக்காமல், கொசுக்களிடம் இருந்து தப்பிக்கத் தரையிலேயே கொசுவலையைக் கட்டி அதற்குள் படுத்திருந்த விதம் அங்கிருந்தவர்களைத் திகைக்க வைத்தது.
இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது பீகார், இங்கே எதையும் எதிர்பார்க்கலாம்” என்றும், “திறமைக்கு இங்கே பஞ்சமே இல்லை” என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரயிலில் இருக்கைக்காகச் சண்டையிடும் மக்களுக்கு மத்தியில், தரையைத் தனது படுக்கையறையாக மாற்றிய இந்த நபரின் ‘ஜுகாட்’ தந்திரம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
