வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், 73 வயது மூதாட்டி ஒருவர் இமயமலைப் பள்ளத்தாக்குகளில் பாராகிளைடிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிர் பில்லிங் பகுதியில் இந்தச் சாகசத்தை அவர் செய்துள்ளார்.
பொதுவாக முழங்கால் வலி, உடல்நலக் குறைவு என்று ஓய்வெடுக்கும் வயதில், எந்தவித பயமும் இன்றி முகத்தில் புன்னகையோடு அவர் வானத்தில் பறந்த விதம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவில், அந்தப் பாட்டி மிகவும் உற்சாகமாகப் பேசுகிறார்.
<a href=”http://
View this post on Instagram
”
காற்றில் பறக்கும்போது எப்படி உணர்கிறீர்கள் என்று பயிற்றுவிப்பாளர் கேட்டதற்கு, “இது மிகவும் வேடிக்கையாகவும், அருமையாகவும் இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார். ஏற்கனவே முசோரியில் இது போன்ற சாகசத்தை செய்திருப்பதாகக் கூறும் இவரைப் பார்த்து, “நீங்கள்தான் எங்களுக்கு உண்மையான உத்வேகம்” என இளைஞர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
