தமிழகத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை விமர்சித்து அதிமுக காது குத்தும் விழா என்ற பெயரில் அழைப்பிதழ் வெளியிட்டது. அந்த அழைப்பிதழில் பட்ஜெட் நடைபெறும் நாள் இடம் மற்றும் தேதி போன்றவைகள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று தமிழக மக்கள் அனைவருக்கும் காதுகுத்தி விழாவை தொடங்கி வைப்பார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பிறகு எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது திமுக அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாபெரும் மொட்டை அடிக்கும் விழா என்ற பெயரில் அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது. அந்த அழைப்பிதழில், அதிமுக என்ற கட்சியை தன் சுயலாபத்திற்காக பாஜகவிடம் விற்றுவிட்டு அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் படுதோல்வி பழனிசாமிக்கு வரும் மே – 8 அன்று மொட்டை அடிக்கும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. பத்து தோல்வி கண்ட பழனிசாமிக்கு பதினோராவது தோல்வியைப் பரிசளிக்க மக்கள் காத்திருக்கிறார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

அதிமுக என்ற கட்சியை தன் சுயலாபத்திற்காக பாஜகவிடம் விற்றுவிட்டு அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் படுதோல்வி பழனிசாமிக்கு வரும் மே – 8 அன்று மொட்டை அடிக்கும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

பத்து தோல்வி கண்ட பழனிசாமிக்கு பதினோராவது தோல்வியைப் பரிசளிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்!… pic.twitter.com/PVhHHjwENN

— DMK IT WING (@DMKITwing) February 17, 2026