காமெடி நடிகர் சந்தானம் சந்தானம் தற்போது 80’ஸ் பில்டப் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சந்தானம், சாப்பிடும் கலாச்சாரமே மாறிவிட்டது, அதை கலாய்த்து கூட படம் பண்ணலாம் என நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

“இப்போதெல்லாம் வீட்டில் குக் பண்ணி சாப்பிடுபவர்களை விட, புக் பண்ணி சாப்பிடுபவர்கள் தான் அதிகம். 90% பேர் உணவை லைக் பண்ணி சாப்பிடுவதில்லை. இன்ஸ்டாவில் போட்டு லைக் வாங்க தான் சாப்பிடுகிறார்கள்” என இன்றைய உணவுமுறை குறித்து தனது ஸ்டைலில் கருத்து தெரிவித்துள்ளார்.