திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் இன்ஸ்டாகிராமில் திருப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.
முதலில் நட்பாக பேசிய இருவரும் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுவன் சிறுமி தனியாக இருந்த நேரத்தில் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கே வி ஆர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் 16 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
