மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்தரத்தைச் சேர்ந்தவர் சரவணமருது சௌந்தர பாண்டி. இவருக்கு 28 வயது. சினிமாவில் ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்ட சரவணா மருது குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். சனி பிணம் என்ற சிறுகதையை வைத்து தயாரிக்கப்பட்ட லிட்டில் விங்ஸ் குறும் படத்தில் சரவணன் மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோர் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சரவணா மருது மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சரவணமருதுவை கொலை செய்து அவரது உடலை கீரனூர் பகுதியில் இருக்கும் கண்வாய் பகுதியில் புதைத்தது தெரியவந்தது ஒரு பெண் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிலரை கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த குறும்பட ஒளிப்பதிவுக்கு லிட்டில் விங்ஸ் படம் தேர்வானது.

ஆனால் அந்த குறும்படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்த சரவணன் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கொலை செய்யப்பட்டவருக்கு தற்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டது பேசு பொருளாக மாறி உள்ளது.