நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கவின் என்ற இளைஞரின் ஆணவக் கொலை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் இடையே பீதி மற்றும் குழப்பம் ஏற்படுவதோடு, விசாரணை திசைதிருப்பப்பட வாய்ப்பு இருப்பதால், தவறான தகவல் பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சிலர் கவின் கொல்லப்பட்டதாக கூறி, அந்த சம்பவத்துடன் தொடர்பில்லாத வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது முற்றிலும் தவறானது எனவும், அவை உண்மையை வழி தவறச் செய்யக்கூடியதாக இருப்பதால், எந்தவித உறுதிப்படுத்தும் ஆதாரமின்றி வீடியோ பகிரும் நபர்கள் மீது சைபர் குற்றச்சாட்டு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிரும் போது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
