உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்நிறுவனம் இன்ஸ்டாகிராம் செயலியில் சில அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி டுவிட்டர் செயலியை போல இன்ஸ்டாகிராமிலும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ப்ளூ டிக் களுக்கான கட்டணத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது இன்ஸ்டாகிராம் செயலியில் யார் வேண்டுமானாலும் கட்டணங்களை செலுத்தி இனி ப்ளூ டிக் வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.