தற்போது புது அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் செயலி கொண்டுவந்திருக்கிறது. நடப்பு ஆண்டு துவங்கியதிலிருந்து பல்வேறு அப்டேட்டுகளை கொண்டுவந்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது அதன் அழைப்புகள் அம்சத்தில் கவனம் செலுத்தி உள்ளது. பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அழைப்புகளை மேற்கொள்ள எளிதாக்கும் அடிப்படையில் புது அழைப்பு குறுக்கு வழிகள் (shortcut ) அம்சத்தை கொண்டுவந்து இருக்கிறது. இதன் வாயிலாக பயனாளர்கள் சாதாரண வாய்ஸ் கால் போலவே விரைவாகவும் எளிதாகவும் அழைப்பை மேற்கொள்ள இயலும்.
மேலும் வாட்ஸ்அப்-ஐ திறக்காமலேயே வாட்ஸ் அப் கால்களை மேற்கொள்ள புது அம்சங்களை கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி பயனாளர்கள் அடிக்கடி அழைக்கும் தொடர்புகளுக்கு தனிப்பயன் ஷார்ட்கட்டுகளை நாம் உருவாக்க தேவையில்லை. அதேபோன்று அடிக்கடி பேசுபவர்களது எண்களை மட்டும் தனியாக பிரித்து எளிதாக அணுகும் விதமாக அவர்களது கால் ஷார்ட்கட்டை முகப்பு திரையிலேயே வாட்ஸ்அப் உருவாக்கி விடுகிறது.
இதன் காரணமாக முகப்பு திரையும் தொட்டால் போதும் சம்பந்தப்பட்ட ஆளுக்கு அழைப்பு துவங்கிவிடும். பீட்டா பயனர்களிடம் சோதனையிலுள்ள இந்த அம்சமானது விரைவில் அனைத்து பயனர்களுக்கு வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. சாதாரண அழைப்பை போன்றே வாட்ஸ்அப் அழைப்பையும் மேற்கொள்ள வைக்கும் முயற்சியாக இந்த புது அம்சம் கொண்டுவரப்பட்டு உள்ளது