இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று முன்னதாக  கேட்டுக் கொண்டது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது‌. இந்த திட்டம் விரைவில் அனைத்து இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கபட்டிருந்த நிலையில் ஏர்டெல் தனது குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் விலையை ரூ.99ல் இருந்து ரூ.155 ஆக உயர்த்தியுள்ளது.

இது வரை இல்லாமல், அதிரடியாக 56 ரூபாய் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை. 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 24 நாட்கள் வரை மட்டுமே இதன் பலன்கள் கிடைக்கும். இதனால் ஒரு மாதம் முடிவதற்குள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. நுகர்வோரிடமிருந்து அதிருப்தி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.