ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் மற்றும் எம் சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்களின் விலை உயர்வு இன்று பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. அதன்படி ஜல்லி மற்றும் வெட் மிக்ஸ் யூனிட் 3000 ரூபாய் மற்றும் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து கட்டணம் ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம் சாண்டு நான்காயிரம் ரூபாய் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து கனிம பொருள்களுக்கும் யூனிட்டுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.