சமூக வலைதளங்களில் இப்போது ஒரு பகீர் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பெண் தனது வீட்டு சமையலறையில் வழக்கம்போல சமையல் செய்து கொண்டிருக்கிறார். அருகில் அவரது வளர்ப்பு பூனை நின்று கொண்டிருக்கிறது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ஜன்னல் வழியாக ஒரு பெரிய பாம்பு திடீரென உள்ளே புகுந்து, நேராக அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்குள் விழுகிறது. இதைப் பார்த்த அந்தப் பெண் அலறியடித்துக் கொண்டு பயந்தாலும், சமயோசிதமாகச் செயல்பட்டு அந்தப் பாத்திரத்தை உடனடியாக ஒரு தட்டைக் கொண்டு மூடிவிட்டார். இந்த அதிர்ச்சியான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.
बिन बुलाया मेहमान जब खाने की खुशबू से सांप भी खुद को रोक न पाए… पर शुक्र है कि ढक्कन सही समय पर बंद हो गया।
किस्मत अच्छी थी कि कैमरा चल रहा था, वरना इस 'नागिन' वाली रेसिपी पर कोई यकीन ही नहीं करता।🐍🍲😂 pic.twitter.com/QrTzrYp6eV
— Shagufta khan (@Digital_khan01) January 17, 2026
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “நிஜமாவே இது ஒரு திகில் படம் போல இருக்கிறது” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர், “இன்று அந்த வீட்டில் பாம்பு கறி தானா?” என கிண்டலாகக் கேட்டுள்ளார். எது எப்படியோ, சமையலறை ஜன்னல்களைக் கூட கவனமாகப் பார்த்துதான் கையாள வேண்டும் என்பதை இந்த வீடியோ நமக்கு எச்சரிக்கையாக உணர்த்துகிறது. அந்தப் பெண்ணின் துணிச்சலையும், அந்தப் பூனையின் மிரட்சியையும் பார்த்த பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
