தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கியதில் இருந்து அரசியலில் தீவிரமாக விஜய் களமிறங்கியுள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று வண்ணங்களில் கட்சி கொள்கையை உள்ளடக்கிய வகையில் கொடி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொடி அறிமுகம் செய்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்ற அனுமதி பெறும் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொடி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மாநாடு நடத்துவது குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.