கடந்த ஆட்சியில் தனிநபர்களுக்கும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கும் மட்டுமே சாதகமாக மின்வாரிய டெண்டர்கள் வழங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், இனிவரும் காலங்களில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே டெண்டர் ஒதுக்கப்படும்” என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உறுதியளித்துள்ளார்.
மின்சாரத் துறையில் டிஜிட்டல் போர்ட்டல் மூலம் முற்றிலும் வெளிப்படையான டெண்டர் முறை கொண்டு வரப்படும் என்றும், கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“சாதகமாக டெண்டர் இனி தொடராது”
“கடந்த ஆட்சியில் தனிநபர், நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதாக இன்றைய கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் புகார். இனிவரும் காலங்களில் ஒப்பந்ததாரர்களுக்கு தகுதி அடிப்படையில் அனைத்து நிறுவனங்களுக்கும் மின் வாரிய டெண்டர். தனிநபர், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு… pic.twitter.com/lKmOI2zYax
— Thanthi TV (@ThanthiTV) May 25, 2026
“>
மேலும், இனிமேல் தகுதியான அனைத்து நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இன்னும் ஓராண்டுக்குள் மின்துறையில் முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
