அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததற்குப் பின்னால் ‘குதிரை பேரம்’ நடந்திருப்பதாக அதிமுக மற்றும் திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், “குதிரை பேரத்தை விடவும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றிச் சிந்தித்ததே மிகப்பெரிய தவறான விஷயம்” என்று சாடியுள்ளார்.
மேலும், இந்த காரணத்தினால்தான் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் இனி அதிமுகவில் நீடிப்பது சரியாக இருக்காது என்று தீர்க்கமாக முடிவு செய்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
