தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், அந்தச் சின்னத்தின் முக்கியத்துவம் குறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உற்சாகமாகப் பேசியுள்ளார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட அறிவிப்பு வெளியானதில் இருந்தே பொதுமக்களின் பார்வை மொத்தமாக மாறிவிட்டது. அந்தச் சின்னத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தவெக-வை நோக்கித் திரும்பிவிட்டனர்,” எனத் தெரிவித்தார்.
சமூகத்தில் விசிலின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி அவர் பேசியதாவது, இனிமேல் காவல்துறையினரையோ அல்லது பேருந்து நடத்துநர்களையோ ‘விசில் அடிக்காதீர்கள்’ என்று சொல்லப்படும் அளவுக்கு இந்தச் சின்னத்தின் முக்கியத்துவம் மக்களிடையே பதிந்துவிடும்.
ஒரு செயலைத் தொடங்குவதற்கும், நெறிப்படுத்துவதற்கும் விசில் எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குப் புரியும். அத்தகைய ஒரு வலிமையான சின்னத்தை இறைவன் தானாகவே முன்வந்து விஜய்க்கு அளித்துள்ளார்.
இந்தச் சின்னம் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்க ஒலியாக அமையும் என அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர்.
