முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அண்மையில் திமுகவில் இணைந்தனர். இந்த அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, ஓபிஎஸ் அணியின் மிக முக்கியமான ஆதரவாளராகக் கருதப்பட்ட முன்னாள் எம்.பி. தர்மரும் இன்று அதிரடி முடிவை எடுத்துள்ளார்சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று (ஜனவரி 24) மாலை தர்மர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது அவர் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கு வலுசேர்ப்பதாகவும் பார்க்கப்படுகி
றது.
