உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு புது புது அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வாய்ஸ் மெசேஜ் என்று சொல்லப்படும் குரல் வழி தகவல்களை ஸ்டேட்டசில் வைக்கும் வசதியை வாட்சாப் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை மெசேஜ்களுக்கு உள்ளே மட்டுமே இருந்துவந்த இந்த வசதி, இனி ஸ்டேட்டசிலும் வருவதால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2.23.2.8 என்ற அப்டேட்டில் இந்த வசதியினை வாட்சாப் அறிமுகம் செய்துள்ளது. நாளடைவில் இந்த வசதி உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.