BSNL ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை வாங்க நினைக்கும் பயனாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இதற்கு நீங்கள் பணம் செலவழிக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் BSNL நிறுவனம் இப்போது பிராட்பேண்ட் இணைப்பு நிறுவல் கட்டணத்தை தள்ளுபடி செய்து உள்ளது. நீங்கள் ஒரு புது BSNL ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை பெற திட்டமிட்டு இருப்பின், அதற்குரிய நிறுவல் கட்டணத்தை நிறுவனம் முழுமையாக ரத்து செய்துள்ளது.
அதே நேரம் முன்பு நிறுவல் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் BSNL நிறுவனம் இம்மாற்றங்களை செய்து வருகிறது. அதே சமயத்தில் BSNL நிறுவனத்தின் இந்த சலுகை 31 மார்ச் 2023 வரை மட்டுமே என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு முன்பாக ஃபைபர் இணைப்புக்கு ரூபாய்.500 செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இப்போது காப்பர் இணைப்புக்கு ரூபாய்.250 மட்டும் செலுத்தவேண்டும்.
BSNL நிறுவனம் முதல் முறையாக இது போன்ற சலுகையை வழங்கி உள்ளது. இவற்றில் நிறுவல் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. BSNL பிராட்பேண்ட் திட்டங்களில் மிக பிரபலமான சலுகை ரூபாய்.399 ஆகும். இத்திட்டத்தில் 1000 GP வரை 30 எம்பிபிஎஸ் வேகம் கிடைக்கும். அதோடு வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
மேலும் அன்லிமிடெட் காலிங்வசதியும் இருக்கிறது. BSNL 449 பிராட்பேண்ட் திட்டத்தில் நீங்கள் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் 3300GP வரை டேட்டாவை பெறலாம். BSNL 1799 பிராட்பேண்ட் திட்டத்தை வாங்குவது உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக தரவு வேகம் சிறப்பாக இருக்கும் திட்டத்தை விரும்புபவர்களுக்கு, இத்திட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும்.