நாம் ஸ்மார்ட் போன்கள் வாங்கும் ஒவ்வொரு முறையும் சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். இப்போது ஸ்மார்ட் போன்கள் வாங்கும்போது நாம் செய்யக்கூடாத தவறுகள் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

# மக்கள் பல பேருக்கும் ஆண்ட்ராய்டு போன் வாங்கலாமா (அ) ஐபோன் வாங்கலாமா என்ற குழப்பம் இருந்து வருகிறது. இந்த 2 போன்களும் வெவ்வேறு அடித்தளங்களை கொண்டவை ஆகும். இதில் ஐபோன் எளிமை மற்றும் தனி உரிமை பற்றியது ஆகும். அதே நேரம் ஆண்ட்ராய்டு தேர்வு மற்றும் கட்டுப்பாடு பற்றியது ஆகும்.

# ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு முன்னதாக அந்த போனில் உங்களது தேவைகள் என்ன என்பதை சிந்தித்து வாங்க வேண்டும். முதலில் ஸ்மார்ட் போனில் நீங்கள் விரும்பும் அம்சங்களை பட்டியலிடுங்கள். எடுத்துக்காட்டாக சமூகவலைத்தளங்கள் அதிகம் பயன்படுத்துபவராக இருப்பின் போட்டோஷூட் (அ) லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு உயர்தர கேமரா கொண்ட மொபைலை தேர்ந்தெடுக்கலாம்.

# இதற்கிடையில் மொபைலுக்கு விலைக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மொபைலின் விலை முக்கியமில்லை, அவற்றில் என்னென்ன மேம்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை மட்டும் பார்த்து தேர்வு செய்யவேண்டும்.

# புது ஸ்மார்ட்போன் வாங்கும்போது சாப்ட்வேர் அப்டேட்டுகள் பற்றி நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். நீங்கள் மொபைலை 4 -5 வருடங்கள் வரையிலும் வைத்திருக்க திட்டமிட்டால், பல்வேறு ஆண்டுகளாக OS-நிலை அப்டேட் மற்றும் மாதாந்திர பாதுகாப்பு இணைப்புகளை வழங்கும் மொபைலை தேர்வு செய்ய வேண்டும்.