கூகுள் நிறுவனமானது தன் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் பல வித அப்டேட்டுகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஆண்ட்ராய்டு 13 OS அண்மையில் வெளியாகியது. இனிமேல் சிம் கார்டு பயன்படுத்த வேண்டாம் என சில வாரங்களுக்கு முன்னதாக தகவல் வெளியாகியது. சிம் கார்டுகளுக்கு விரைவில் தேவை இன்றி போய்விடும். முன்பே ஆப்பிள் நிறுவனம் சில தேர்ந்தடுத்த நாடுகளில் சிம் கார்டுகள் இல்லாத ஐபோன்களை அறிமுகம் செய்து உள்ளது. மேலும் Android போனை பொறுத்தவரையிலும் e-sim-ம் பயன்படுத்தும் அம்சமானது பரிசோதனையில் உள்ளது.
e-sim (அ) சிம் கார்டா எனும் தேர்வில், இரண்டும் சேர்த்து பயன்படுத்தும் ஆப்ஷனும் வழங்க முடியுமா என பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் Android 13 வெர்ஷன் பயன்படுத்துவோர் ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு தங்களுடைய e-sim-ஐ மாற்ற இயலும் என தகவல் வெளியாகியுள்ளது. e-sim என்பது மிகப் பெரிய வணிகம் ஆகும். ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அதனை கையிலெடுத்தது. இந்த சூழ்நிலையில் ஆப்பிளை விட மிக அதிக எண்ணிக்கையில் உலகம் முழுவதும் யூசர்களை கொண்டுள்ள ஆண்ட்ராய்டு தளத்துக்கு வருமானம் என்ற ரீதியில் மட்டுமல்லாது, தொழில்நுட்பத்தில் சமீபத்திய அம்சங்களை பயன்படுத்தவும் இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.
இது சாத்தியமானால் நிறுவனம் தன் செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமும் இன்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனம் மிகப் பெரிய உதாரணம். மிக வேகமாக e-sim ஆக்டிவேஷனை ஐபோன் யூசர்களுக்கு வழங்கியது. அதேபோன்று Android போன்களுக்கு இனிமேல் e-sim தான் என்பதை உறுதிசெய்தால், பலகட்ட செயல்பாடுகளை சீராக்கி குழப்பங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். அதோடு பீட்டா வெர்ஷன் குறித்த அறிக்கையில் e-sim பயன்பாடு அறிமுகம் செய்தால், முதலாவதாக கூகுள் நிறுவனம் தன் பிக்சல்கள் மற்றும் கூகுள் மொபைல் சேவைகள் சாதனங்களுக்கு அறிமுகம் செய்யும் (அ) கட்டுப்படுத்தும் என கூறி இருக்கிறது.