OpenAI என்ற ஸ்டார்ட்அப் வாயிலாக ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டாலும், நிறுவனத்தால் இதுவரையிலும் எந்தவொரு செயலியும் துவங்கப்படவில்லை. கூகுள் ப்ளே ஸ்டோரில் ChatGPT என்ற பல்வேறு செயலிகள் காணப்படுகிறது. இச்செயலிகளை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது. இவையனைத்தும் போலியான ஆப்கள் என்பதால் உங்களது  தனிப்பட்ட டேட்டா திருடப்படும் அபாயம் இருக்கிறது.

ஆகவே நீங்கள் இந்த போலி ChatGPT பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ChatGPT எனும் பெயரிலுள்ள போலி செயலிகளை தவிர்க்க வேண்டும். OpenAI எனும் ChatGPT செயலியை Android (அ) Apple iOSக்கு அறிமுகப்படுத்தவில்லை. எனினும் Google Play Store மற்றும் Apple App Store ஆகிய இரண்டிலும் ChatGPT எனும் பெயரில் பல்வேறு செயலிகள் இருக்கிறது. ஆகையால் அந்த செயலிகள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.