சிக்கிம் மாநிலத்தில் பெற்றோர்களை வயதான காலத்தில் பிள்ளைகள் கவனிக்காமல் தவிக்க விடும் சம்பவத்தை தடுக்க மாநில அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வயதான பெற்றோரை பாசம் காட்டி அன்பாக கவனித்து கொள்ளும் மகன்கள் மற்றும் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு மற்றும் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் பெற்றோரை அன்பாக பராமரித்து கொண்ட 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சுதந்திர தினமான நேற்று 199 பேருக்கும் ஷ்ரவன் குமார் விருதுகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் கொடுக்கப்பட்டது. குடும்ப மதிப்புகள் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு அந்த விருதுகளை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.