டெல்லியில் சுற்றி திரியும் அனைத்து தெரு நாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. பலர் இந்த உத்தரவை வரவேற்ற நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கேரள மாநிலம் கோழிவெட்டும்வெலி பகுதியில் தெரு நாய்க்கு சிலை வைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்த தெரு நாய் பெயர் எல்தோ.
இந்த தெரு நாய்க்கு ஊர் மக்கள் சிலை வைத்துள்ளனர். அந்த நாய்க்கு பாலில் செய்த கேக் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் கேக்கிற்கு எல்தோ கேக் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
