பெற்றோர்களின் சுயநலத்தாலும் ஈகோ சண்டையாலும், ஒரு பிஞ்சு குழந்தை அனாதை இல்லத்திற்கு அனுப்பப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் மனிதநேயமற்ற சம்பவம் ஒன்று வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் சும்மா காட்டுத்தீ போல பரவி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
குடும்பக் கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றம் மூலம் விவாகரத்து (Divorce) பெற்றுக் கொண்ட ஒரு தம்பதியினர், தங்களது விவாகரத்து நடைமுறைகள் முடிந்த பிறகு, தங்களது சொந்தக் குழந்தையின் கஸ்டடியை (வளர்க்கும் உரிமை) எடுத்துக்கொள்ள இருவருமே ஒற்றைக் காலில் நின்று மறுத்துள்ளனர்.
“எனக்கு குழந்தை வேண்டாம்” என்று தாயும், “என்னால் வளர்க்க முடியாது” என்று தந்தையும் பிடிவாதம் பிடித்ததால், அந்த அப்பாவி பிஞ்சு குழந்தை வேறு வழியின்றி அனாதை இல்லத்திற்கு (Orphanage) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெற்று வளர்த்த தங்களது சொந்தக் குழந்தையை, விவாகரத்துக்குப் பின் ஒரு பாரமாக நினைத்து இருவருமே கழட்டிவிட்ட இந்த கொடூரமான செய்தி சோஷியல் மீடியாவில் வெளியாகி, நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

माता-पिता के तलाक के बाद दोनों ने ही बच्ची की कस्टडी लेने से इनकार कर दिया, जिसके चलते उसे अनाथालय में भेज दिया गया 💔

सब मोह-माया है। pic.twitter.com/BIuY55X0oe
— Anamika Pal (@BindasWith) July 4, 2026

“உலகத்தில் எல்லாமே வெறும் மோகமும் மாயையும்தானா? பெத்த பாசத்திற்குக் கூடவா இந்த காலத்தில் மதிப்பில்லாமல் போய்விட்டது?” எனப் பலரும் தங்களது குமுறல்களை இணையத்தில் கொட்டித் தீர்த்து வருகின்றனர். தங்களது ஈகோவிற்காகக் குழந்தையின் எதிர்காலத்தையே நரகமாக்கிய அந்த பெற்றோர்களுக்குக் கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது.