“அமெரிக்க மருத்துவத்துறை எங்களை மொத்தமாகக் கொள்ளையடிக்கிறது, ஆனால் இந்தியாவோ உலகிலேயே மிக மலிவான மருந்துகளை மக்களுக்குத் தருகிறது” என்று அமெரிக்க பெண் ஒருவர் அந்நாட்டு மருத்துவக் கொள்ளையை அக்குவேறாக ஆணிவேறாகக் கிழித்துத் தொங்கவிட்டு வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் சும்மா காட்டுத்தீ போல பரவி உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘லிஸ்’ (Liz) என்ற அந்த அமெரிக்கப் பெண்ணின் ஆன்ட்டிக்கு ரத்தப் புற்றுநோய் (Blood Cancer) பாதிப்பு இருந்துள்ளது.
1அதற்கான மாத்திரையை அமெரிக்காவில் வாங்கிய போது, அதற்கு தலா 900 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 85,000 ரூபாய் வரை வசூலித்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த அந்த பெண், அதே புற்றுநோய் மாத்திரை இந்தியாவில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்று சும்மா எதேச்சையாக விசாரித்தபோது அவருக்குத் தலையே சுற்றிவிட்டது.
அமெரிக்காவில் 85,000 ரூபாய்க்கு விற்கப்படும் அதே கேன்சர் மாத்திரை, இந்தியாவில் வெறும் 35 ரூபாய்க்கு மட்டுமே கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த பெண், உடனடியாக வீடியோ ஒன்றை எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களது சொந்த நாட்டு மக்களையே மருத்துவக் காப்பீடு மற்றும் மருந்து விலைகளின் பெயரால் எப்படிச் சுரண்டுகின்றன என்பதையும், இந்தியா போன்ற நாடுகள் ஏழை எளிய மக்களின் உயிரைக் காக்க எவ்வளவு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்குகின்றன என்பதையும் அவர் அந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் விவரித்துள்ளார்.
<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”en” dir=”ltr”>>Revlimid medicine of blood cancer.<br>USA 🇺🇸 cost is $900 and in India 🇮🇳 it's cost is $3. <a href=”https://t.co/6DnmAfl5yo”>pic.twitter.com/6DnmAfl5yo</a></p>— wolf ka beta (@RakeshK25140028) <a href=”https://x.com/RakeshK25140028/status/2072952018130657713?ref_src=twsrc%5Etfw”>July 3, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
இந்திய மருத்துவத் துறையின் இந்த மகத்தான சேவையை உலக அரங்கில் பாராட்டி, அமெரிக்காவை அந்தப் பெண் கரித்துக் கொட்டியுள்ள இந்த வீடியோவை, இந்திய நெட்டிசன்கள் சும்மா தீயாய் ஷேர் செய்து சமூக வலைத்தளங்களை அதிரவைத்து வருகின்றனர்.
