விமான நிலையம் ஒன்றில் 88 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது பேத்திக்கும் இடையே நடந்த நெஞ்சை உருக்கும் அதேசமயம் பேரன்பை வெளிப்படுத்தும் அழகான வீடியோ ஒன்று வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் சும்மா காட்டுத்தீ போல பரவி லட்சக்கணக்கான இதயங்களை வென்று வருகிறது. தனது ஆசைப் பேத்தியை வரவேற்பதற்காக அந்த 88 வயது தாத்தா, மிகுந்த ஆவலோடும் பாசத்தோடும் ஏர்போர்ட்டுக்கு வந்து காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்து சேர்ந்த பேத்தி, நேராகத் தனது தாத்தாவின் அருகில் வந்து, அவருக்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்தார். ஆனால், தன் கண் முன்னாடியே, மிக அருகிலேயே பேத்தி நின்றுகொண்டிருந்த போதிலும், அந்த வயதான தாத்தாவால் அவளை அடையாளம் கண்டுகொள்ளவே முடியவில்லை. ​தான் கடைசியாகப் பார்த்த தன் குட்டிப் பேத்தி, அதற்குள் இவ்வளவு பெரிய பெண்ணாக அசுர வளர்ச்சி அடைந்து தன் முன்னால் வந்து நிற்பாள் என்று அந்த தாத்தா கொஞ்சமும் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்கவில்லை.

An 88-year-old grandfather went to the airport to pick up his granddaughter.
As soon as she arrived, she stood right beside him—but he didn't recognize her.
He never imagined that his little granddaughter had grown up so much. 🥹🥹❤️ pic.twitter.com/KKT0Sd3Jhs
— Shaurya Mishra (@shauryabjym) July 4, 2026

தன் பேத்தியைத் தேடி அவர் அங்கும் இங்கும் பார்க்க, இறுதியில் அவள்தான் தன் பேத்தி என்பதை உணர்ந்த அந்த நொடியில், தாத்தாவின் முகத்தில் தெரிந்த அந்தப் பேரானந்தமும் நெகிழ்ச்சியும் அங்கிருந்த கேமராவில் தத்ரூபமாகப் பதிவாகி இணையத்தையே அதிர வைத்துள்ளது. இன்ஸ்டா மற்றும் எக்ஸ் தளங்களில் இந்த நெகிழ்ச்சியான வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “பாசத்திற்கு என்றும் வயசாவதே இல்லை” என உருகிப்போய் கமெண்ட் செய்து வருவதுடன், இந்த கியூட் வீடியோவை இப்போதைக்கு இணையத்தின் டாப் ட்ரெண்டிங்கில் உலா வரச் செய்துள்ளனர்.