உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில் மனிதநேயத்தையே உலுக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மது அருந்துவதை தடுத்த மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர், தனது 16 வயது சிறுமியான தங்கையை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில், “இறந்த மனைவியின் முகத்தை தங்கையிடம் பார்த்ததால் இவ்வாறு செய்தேன்” என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
This man repeatedly Raped his own Minor Sister after being out on bail for beating his wife to death for stopping him from drinking alcohol.
He told police he saw his dead wife's face in his 16 y/o Sister, so he raped her. The truth came out only after the sister, with help from… pic.twitter.com/rAl0cXeErL
— زماں (@Delhiite_) July 4, 2026
இந்த கொடுமை நீண்ட நாட்கள் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது நண்பர்களின் உதவியுடன் ரகசியமாக வீடியோ பதிவு செய்து ஆதாரங்களை சேகரித்தார். பின்னர் அந்த ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
