ஷாப்பிங் செய்யும் போது பொருத்தமான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது, கடையின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை நடந்து செல்ல வேண்டிய நிலை போன்ற காரணங்களால் சோர்வாக மாறும் சூழ்நிலை பலருக்கும் நேரிடுகிறது. அதேபோல், வாகனத்தை கடைக்கு வெளியே பார்க்கிங் செய்ய இடமின்றி தவிக்கும் அனுபவமும் உண்டு. இத்தகைய சூழ்நிலையை வித்தியாசமான முறையில் எதிர்கொண்ட ஒரு பெண்ணின் செயல், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் டிசம்பர் 18 அன்று நடந்த இந்த சம்பவம், அங்குள்ள ஒரு துணிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு பெண் வாடிக்கையாளர் மின்சார ஸ்கூட்டரை கடைக்குள் ஓட்டிச் சென்று, அதிலேயே அமர்ந்தபடி துணிகளைப் பார்வையிட்டு தேர்வு செய்வது பதிவாகியுள்ளது.
காணொளியின் படி, சில நிமிடங்கள் கடையைச் சுற்றி வந்த அந்தப் பெண், விரும்பிய ஆடைகளைத் தேர்ந்தெடுத்த பின்னர், தனது ஸ்கூட்டரை நேரடியாக பில்லிங் கவுண்டருக்கு கொண்டு சென்று பணம் செலுத்தி கடையிலிருந்து வெளியேறுகிறார்.

 

44

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மறுநாள் ஒரு டெலிவரி பணியாளரும் தனது மின்சார வாகனத்துடன் அதே கடைக்கு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் பொருட்களை இறக்கிவிட்டு கடையை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த வித்தியாசமான சம்பவம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “இது சீனாவிலோ அல்லது உலகிலோ முதல் ‘டிரைவ்-இன்’ துணிக்கடையா?” என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.