உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு எலான் மஸ்க் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறார். தற்போது எலன் மஸ்க் டுவிட்டர் வாசிகளுக்கு அட்டகாசமான சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது விரைவில் ட்விட்டரில் இருக்கும் நம் சக ஃபாலோயர்களிடம் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ காலில் பேச முடியும் என அறிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி உள்ள நிலையில் தற்போது ட்விட்டரிலும் இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட உள்ளது. இது ட்விட்டர் பயனர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.