இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு சேவையில் தமிழ் மொழி திடீரென நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சேவையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது நிறுவன தொலைபேசி எண் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஏர்டெல்லில் இருந்து ஜியோக்கு மாறியதால் மாநில மொழி தேர்வு வசதியில் சிறிய கோளாறு ஏற்பட்டது.

இந்த மாற்றத்தின் காரணமாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை தேர்வு செய்யும் வசதி மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை நீக்கப்பட்டு தமிழ் மொழியில் முன்பதிவு சேவை சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி வாடிக்கையாளர்கள் தமிழில் சிலிண்டர் புக் செய்ய முடியும்.