இந்தியாவில் வட மாநிலங்களில் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மறுபக்கம் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் காற்று மாசு காரணமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.