இந்தியாவில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சாதாரண பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்மைக் கொண்டு ஒரு நபர் உருவாக்கியுள்ள ‘தேசி ஏர் கூலர்’ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம்மை பாதியாக வெட்டி, அதில் மின்சார மோட்டார் மற்றும் மின்விசிறியைப் பொருத்தி, குளிர்ந்த காற்றைப் பெறுவதற்காக வைக்கோல் போன்ற வலைகளைச் சுற்றிலும் அமைத்துள்ளார்.
மேலும் மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த புதுமையான கண்டுபிடிப்பு, ஏசி-க்கு இணையான குளிர்ந்த காற்றை வழங்குவதைக் கண்டு நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த தொழில்நுட்பம் பலரின் கவனத்தை ஈர்த்தாலும், பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளையும் நிபுணர்கள் முன்வைக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ள நிலையில், “திறமைக்கு இந்தியாவில் பஞ்சமில்லை” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இருப்பினும், இதுபோன்ற மின்சாரக் கருவிகளை வீட்டிலேயே உருவாக்கும்போது மின் கசிவு அல்லது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பயனர்கள் அறிவுறுத்தி உள்ளனர். குளிரூட்டி வாங்குவதற்கு வசதியில்லாத ஏழை எளிய மக்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
