தமிழகம் முழுவதும் தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் அனைத்து உரிமையாளர்களும், உணவு பாதுகாப்புத்துறை விதிகளின்படி முறையாக உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறிப்பாக, பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை ஆன்லைன் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் துறை அறிவித்துள்ளது.
உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளுக்குச் சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
