இன்றைய காலகட்டத்தில் பணம் அனுப்புவதற்கு பலரும் வீட்டில் இருந்தபடியே மொபைல் மூலமாக யு பி ஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். அதில் கூகுள் பேய் மற்றும் போன் பே உள்ளிட்ட எந்த யூபியை முறையை பயன்படுத்த வேண்டும் என்றாலும் அதற்கு இன்டர்நெட் தேவை. சில நேரங்களில் நாம் இன்டர்நெட் இல்லாமல் அவதிப்படும் போது அப்படியான சூழ்நிலையில் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். அதாவது நம்முடைய பணத்தை அனுப்ப *99#என்ற சேவை மூலம் ஆஃப்லைனில் பணம் அனுப்பிக் கொள்ள முடியும்.

இந்த சேவையை இணையம் இல்லாமல் நாம் எளிதில் பயன்படுத்தலாம். இந்த சேவையை பயன்படுத்தி ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் பணம் எடுக்கலாம். குறிப்பாக வங்கி கணக்கை லிங்க் செய்த மொபைல் எண்ணில் இருந்து மட்டுமே மேற்கண்ட எண்ணுக்கு டயல் செய்து இந்த சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் அதிகபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வரை பணத்தை அனுப்பலாம் எனவும் இந்த சேவைக்கு 50 பைசா நீங்கள் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.