ஆண்ட்ராய்டு என்பது ஓபன் சோர்ஸ் பிளாட் ஃபார் என்பதால் சாப்ட்வேர் டிசைனர் தங்களுக்கு ஏற்ற விதமாக அதனை மாற்றி அமைக்கலாம். அதன்படி தற்போது முழு வடிவிலான விண்டோஸ் பிளாட்பார் நீங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்த முடியும். Winlator என்ற தொழில்நுட்பம் தற்போது இதனை சாத்தியப்படுத்தி உள்ள நிலையில் இதனை பயன்படுத்த மிகவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலில் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து வின்லேட்டரை டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட folder க்கு டவுன்லோட் செய்த பைலை நகர்த்தி இயக்கலாம். GitHub இருந்து winlater APK, OBB கோப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டும்.

அதன்பிறகு உங்களின் ஸ்மார்ட் போனில் ஏபிகே பைலை இன்ஸ்டால் செய்து அதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். தற்போது பைல் மேனேஜரை திறந்து OBB என்ற பைலை காப்பி செய்து android/OBB என்ற பைல் லொகேஷனுக்கு சென்று காபி செய்த பைலை பேஸ்ட் செய்ய வேண்டும். அதன் பிறகு வின் லேட்டர் பயன்பாட்டை மீண்டும் திறந்து OBB இமேஜ் பைலை நிறுவ அனுமதித்த பிறகு கிளிக் செய்ய வேண்டும். தற்போது நீங்கள் சிறிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் விண்டோ ஓ எஸ் இயக்கலாம். இந்த செயலி தற்போது சோதனையில் இருப்பதால் சில நேரங்களில் crash ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்