பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தற்போது பிஎஸ்என்எல் 397 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதற்கான வேலிடிட்டி 180 நாட்கள் இருந்த நிலையில் தற்போது 150 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெரும் வாடிக்கையாளர்கள் 60 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால் மற்றும் 100 sms ஆகியவற்றை பெற்று வந்த நிலையில் தற்போது 30 நாட்களுக்கு மட்டுமே பெறுவார்கள். பிஎஸ்என்எல் வழங்கக்கூடிய இந்த திட்டமானது நீண்ட கால சேவையை பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்களாகும்.

முதலில் 30 நாட்களில் பலன்கள் முடிவடைந்த பிறகு இதனுடைய வேலிடிட்டி இருக்கும். சிம்மை செயலில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனளிக்கும் எனவும் இதனால் உங்களின் அவுட்கோயிங் கால்கள் சேவை நிறுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட டேட்டாவை முழுமையாக பயன்படுத்தி விட்டாலும் 40 கே பி பி எஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை 150 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். இரண்டாம் நிலை சிம் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.