டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் மொபைல் போன் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறும் வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் போன்ற இடங்களிலும் கைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் குழந்தைகள் பள்ளி வளாகத்திற்குள் மொபைல் போன் கொண்டு வராமல் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அப்படி கொண்டு வந்தால் அதனை லாக்கரில் வைத்து பள்ளி நேரம் முடிந்த பிறகு மீண்டும் மாணவர்களிடம் மொபைல் ஃபோன்களை கொடுக்க பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.